← Back to News
"ஏமாளிகள் கோமாளிகள்" - நகைச்சுவை விருந்து, எபிசோட் 06 வெளியானது!
Short Film

"ஏமாளிகள் கோமாளிகள்" - நகைச்சுவை விருந்து, எபிசோட் 06 வெளியானது!

By Vishnujan Nagalingam Mar 29, 2026 👁 11 ❤️ 0
கேஷ் பிலிம் பேக்டரி (Kesh Film Factory) தயாரிப்பில் உருவான "ஏமாளிகள் கோமாளிகள்" (EMALIKAL KOMALIKAL) தொடரின் 6-வது எபிசோட் தற்போது யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த எபிசோடில் சதீஸ்குமார் லட்சுமணன் (Sathiskumar Laxman), ஷாமிலா நிசார் (Sahmila Nizar) மற்றும் ஆறுமுகம் காளிதாசன் (Aarumugam Kalidasan) ஆகியோர் தங்களது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளனர்.
ஷாமிலா நிசார் இந்தத் தொடருக்கான சுவாரஸ்யமான வசனங்களை எழுதியுள்ளார்.
கேசவன் திருவைமோலி (Kesavan Thiruvaimoli) இத்தொடரை இயக்கியதுடன், திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு எனப் பல பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்துள்ளார்.

Share this article