கூத்தாடி' திரைப்படத்தின் நெஞ்சை உருக்கும் 'அம்மா உன் பாதம்' பாடல் வெளியீடு!
ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகி, சர்வதேச ரீதியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கூத்தாடி' திரைப்படத்தின் 'அம்மா உன் பாதம்' பாடலின் காணொளி வடிவம் தற்போது வெளியாகியுள்ளது.
அஸோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில் சஜிதா ஜெகதீஸ்வரன் வழங்க, ஈழத்தின் முன்னணி கலைஞன் செல்வின் தாஸ் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தை கவாஸ்கர் காளியப்பன் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு பிரதாப் கண்ணன் இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள 'அம்மா உன் பாதம்' பாடலை பிரதாப் கண்ணனுடன் இணைந்து பழனியம்மாள் பாடியுள்ளார்.
தாயின் பாசத்தைப் போற்றும் வகையில் அமைந்துள்ள இப்பாடல் வரிகளை இசையமைப்பாளர் பிரதாப் கண்ணனே எழுதியுள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஏற்கனவே சிறப்புத் திரையிடல்களை வெற்றிகரமாக முடித்துள்ள 'கூத்தாடி', விரைவில் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை உரிமையை உலகப்புகழ் பெற்ற 'ஐங்கரன் மியூசிக்' நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. செல்வின் தாஸ், சௌந்தர்யா, உமா, சாய் மகாராஜன், சூர்யா மற்றும் தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம், ஈழத்து சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.