← Back to News
இன்று வெளியாகிறது 'இசை இளவரசர்' கந்தப்பு ஜெயந்தனின் ஆத்மார்த்தமான கிராமத்து மெலடி!
Music Video

இன்று வெளியாகிறது 'இசை இளவரசர்' கந்தப்பு ஜெயந்தனின் ஆத்மார்த்தமான கிராமத்து மெலடி!

Mar 29, 2026 👁 8 ❤️ 0
இலங்கை நாட்டின் இசைத்துறையில் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்து வரும் 'இசை இளவரசர்' கந்தப்பு ஜெயந்தனின் இசையிலும் குரலிலும் உருவான "உன்னை போல் யாரும் இல்லை" எனும் புதிய மெலடி பாடல் இன்று சனிக்கிழமை மாலை வெளியாகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு தூய கிராமிய மெலடி பாடலை கந்தப்பு ஜெயந்தன் ரசிகர்களுக்காக வழங்கவுள்ளார். இன்று மாலை 7.30 மணி அளவில் இப்பாடல் உத்தியோகபூர்வமாக இணையத்தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"உண்மையில் மெலடி பாடல்களை இசையமைப்பதுதான் எனக்கு மிகவும் ஆத்மார்த்தமாகப் பிடிக்கும். ஒரு இசையமைப்பாளரின் திறமையை வெளிக்காட்டுபவை மெலடி பாடல்கள் தான் என்பது நிதர்சனமான உண்மை நண்பர்களே!
ஆரம்ப காலங்களில் நான் உருவாக்கிய பல மெலடி பாடல்கள் இலங்கையில் மிகவும் பிரபலமானவை. இலங்கை தேசிய இசை விருது, இசை இளவரசர்கள் விருது என நான் பெற்ற கௌரவங்கள் அனைத்துக்கும் எனது மெலடி பாடல்களே அடித்தளமாக அமைந்தன.

கால மாற்றத்திற்கு ஏற்ப குத்துப்பாடல்கள் மற்றும் ராப் இசையினை வழங்கி வந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பின் இந்த கிராமிய மெலடி பாடலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்."

இளைஞர்களைக் கவரும் வகையில் நவீன இசையைத் தொடர்ந்து வழங்கி வரும் அவர், தனது ஆரம்பகால இசைப் பயணத்தை நினைவூட்டும் விதமாக இந்த மெலடியைக் கொண்டு வந்துள்ளார்.

இப்பாடல் இலங்கை இசை இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை 7.30 மணிக்கு வெளியாகவுள்ள இப்பாடலைப் பார்த்து, கலைஞர்களுக்கு உங்களின் ஆதரவையும் கருத்துக்களையும் வழங்குமாறு இசை இளவரசர் கந்தப்பு ஜெயந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this article