← Back to News
சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் ‘சேறு‘ குறும்படம்: மண் சரிவுப் பின்னணியில் உருக்கமான படைப்பு!
Short Film

சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் ‘சேறு‘ குறும்படம்: மண் சரிவுப் பின்னணியில் உருக்கமான படைப்பு!

Apr 3, 2026 👁 1 ❤️ 0
சர்வதேச விருதுகளை வென்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இயக்குநர் விதுர்சனின் ‘சேறு‘ (SERU) குறும்படம் இன்று மாலை உத்தியோகபூர்வமாக யூடியூப் தளத்தில் வெளியானது.
மண்ணோடு பிணைந்த ஒரு மாணவனின் வாழ்வியலைச் சொல்லும் இப்படத்தின் கதைக்கரு, மலையகப் பகுதிகளில் ஏற்படும் இயற்கை அனர்த்தமான மண்சரிவை மையமாக வைத்து நகர்கிறது.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்யும் கனமழை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த செய்திகளுடன் தொடங்கும் இக்குறும்படம், ஒரு குடும்பத்தின் உணர்ச்சிகரமான போராட்டத்தை 6 நிமிடங்களில் தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
எழுத்து & இயக்கம்: விதுர்சன் (Vidhurshan)
நடிப்பு: கபிசன், கவிஸ்கர் மற்றும் சுந்தரி
ஒளிப்பதிவு: விது மற்றும் ரொஹான்
படத்தொகுப்பு: பவரொஸான்
தயாரிப்பு: விக்னேஸ்
MR.VITHU யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இக்குறும்படம், அதன் தரமான காட்சியமைப்பிற்காகவும், சமூக அக்கறை கொண்ட கதைக்களத்திற்காகவும் சினிமா ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Share this article