← Back to News
கலியாண பைலா” அதிரடி ஆரம்பம்! ‘நீளிரா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட பாடல் வெளியீடு! 🎶🔥
Music Video

கலியாண பைலா” அதிரடி ஆரம்பம்! ‘நீளிரா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட பாடல் வெளியீடு! 🎶🔥

Apr 3, 2026 👁 2 ❤️ 0
இயக்குனர் சோமீதரனின் இயக்கத்தில், போர் கால நினைவுகளையும் உண்மைச் சம்பவங்களையும் தாங்கி உருவாகியுள்ள ‘நீளிரா’ (A Long Night) திரைப்படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வகையில், அதன் ‘கலியாண பைலா’ Promo Song தற்பொழுது வெளியாகியுள்ளது.
பத்மயன் சிவாவின் இசையில் உருவான இப்பாடல், இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான Sony Music South தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு இலங்கை இசையமைப்பாளரின் படைப்பு இந்த உலகளாவிய தளத்தில் வெளியாவது இதுவே முதன்முறையாகும், இது இலங்கை கலைத்துறைக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
Rap sensation வாகீசன் ராசையா வரிகளை எழுதிப் பாடியுள்ள இப்பாடலில், 'சரிகமப' டைட்டில் வின்னர் கில்மிசா உதயசீலன் மற்றும் ரமணன் நந்தகோபால் ஆகியோர் இணைந்து குரல் கொடுத்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்ட இப்பாடல், படத்தின் ரிலீஸை முன்னிட்டு ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
🎥 படத்தின் சிறப்பம்சங்கள்:
இயக்கம்: பிரபல ஆவணப்பட இயக்குனரும், பாலுமகேந்திராவின் உதவியாளருமான சோமீதரன்.
தயாரிப்பு: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் Stone Bench மற்றும் நடிகர் ராணா டகுபதியின் Spirit Media.
விநியோகம்: தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான AGS Cinema.
ஒளிப்பதிவு: புனே திரைப்படக் கல்லூரி மாணவர் பிரதீபன் செல்வம்.
நடிப்பு: கயல் வின்சன்ட், சிந்தர், நவயுகா உள்ளிட்ட பல இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்கள்.
ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலையும் ஒரு குழந்தையின் நினைவுகளையும் மையமாகக் கொண்ட இத்திரைப்படம், வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்திய - இலங்கை கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள இந்தப் படைப்பு, சர்வதேசத் தரத்தில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this article