இயற்கைக்கும் மனிதனுக்குமான மோதல்: எரிக் பெர்னாண்டோவின் ‘நான் ஒரு மானு’ பாடல் வெளியீடு!
இலங்கை தமிழ் இசைத்துறையில் ஒரு வித்தியாசமான கதை சொல்லல் முறையுடனும், அழுத்தமான சமூகக் கருப்பொருளுடனும் உருவான எரிக் பெர்னாண்டோவின் ‘நான் ஒரு மானு’ (Naa Oru Maanu) பாடல் நேற்று (மார்ச் 20) உத்தியோகபூர்வமாக வெளியானது.
இசை, பாடல் வரிகள், காட்சி அமைப்பு என அனைத்தையும் தானே முன்னின்று கவனித்துள்ள எரிக் பெர்னாண்டோ, இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். "பல ஆண்டுகளாக என் மனதில் வாழ்ந்து வந்த ஒரு கனவு இன்று நனவாகியுள்ளது. இது வெறும் பாடல் மட்டுமல்ல, குரலற்றவர்களின் குரலாகவும், ஒரு நீண்ட கால உணர்வுப் பயணமாகவும் இதனை உருவாக்கியுள்ளேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இயற்கைச் சமநிலையைச் சீர்குலைக்கும் மனிதனும், அதன் விளைவாக மனிதன் எதிர்கொள்ளும் சவால்களும்’ என்ற காலத்திற்கு மிகத் தேவையான ஒரு கருப்பொருளை இப்பாடல் பேசுகிறது. குறிப்பாக, இப்பாடலின் போஸ்டர் மற்றும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர்தர கிராபிக்ஸ் மற்றும் இல்லஸ்ட்ரேஷன் (Illustration) வேலைப்பாடுகள் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளன.
தயாரிப்பு விபரங்கள்
Ratsch Productions (Pvt) Ltd நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு, மிஸ்டர் எம் ரெக்கார்ட்ஸ் (Mister.M Records) சார்பில் விதுரன் ஒலிப்பதிவு பொறியாளராகப் பணியாற்றியுள்ளார்.
பாடலின் இறுதி மெருகூட்டல் (Mastering) பணிகளை டாலா லேப்ஸ் (Tala Labs) தினேஷாந்த் மேற்கொண்டுள்ளார்.
கவனம் ஈர்க்கும் போஸ்டர் வடிவமைப்பு
பாடல் வெளியாவதற்கு முன்பே, அதன் போஸ்டர் வடிவமைப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஒரு பிரம்மாண்டமான யானையின் கண்கள் மற்றும் வேட்டையாடும் மனிதர்களின் உருவங்கள் கொண்ட அந்த போஸ்டர், பாடல் சொல்லப்போகும் 'சொல்லப்படாத கதையை' (The Unspoken Tale) அழகாகச் சித்தரித்திருந்தது.
தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் இப்பாடல், இலங்கை சுயாதீன இசைத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.