இசைஞானியின் இசையில் ‘அந்தோனி’ - மனதை வருடும் ‘வானம் விரிஞ்சிருக்கு’ வீடியோ பாடல் வெளியீடு!
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், ஜெனோசன் மற்றும் சுகிர்தன் ஆகியோரின் இரட்டை இயக்கத்தில் வெளியாகி, உலகெங்கும் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வரும் ‘அந்தோனி’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.
அந்த வகையில், படத்தின் மிக முக்கிய பாடலான ‘‘வானம் விரிஞ்சிருக்கு..‘‘ வீடியோ பாடல் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.
இலங்கைத் தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள திரைப்படம் இதுவாகும். இப்பாடலின் வரிகளையும் அவரே எழுதியிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ராஜகணபதி மற்றும் அகல்யா ஆகியோரின் இனிமையான குரல்களில் இப்பாடல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் வெளியான ‘‘குத்துவிளக்கொளியே..‘‘ பாடலைத் தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள இப்பாடல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தற்போது உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அந்தோனி’, தரமான படைப்பாகவும், இசைஞானியின் முத்திரையோடும் இலங்கைத் தமிழ்த் திரையுலகிற்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.